ADVERTISEMENT

இயக்குநர் பா. ரஞ்சித்துடன் இணையும் கமல்ஹாசன்

09:25 AM Nov 09, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ் கமர்ஷியல் படமாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக பா. ரஞ்சித் கமலுடன் இணையவுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்தையடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரு படங்களின் பணிகளை முடித்த பிறகு பா. ரஞ்சித் படத்தில் கவனம் செலுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT