/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/552_10.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலானபத்தல பத்தல பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி கமல்ஹாசன் மீதும் புகாரும்அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடிப்பதாககூறப்பட்டது. இத்தகவலை படத்தின் இயக்குநர் உறுதி செய்துள்ளார். விக்ரம் படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று(15.5.2022) நடைபெற்றது. இதில் பேசிய படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'கொஞ்சம் லேட்டா சொல்லலாமுன்னுநினைத்தேன், ஆனால் அதற்கு முன்பே தெரிஞ்சிருச்சு. விக்ரம் படத்தில் சூர்யா சார் நடித்திருக்கிறார். நன்றி சூர்யா சார். எதற்கு நன்றி சொல்றேன் என்று படம் பார்த்த பிறகு உங்களுக்கு புரியும்" என்றார். இது தொடர்பாக பேசிய கமல், கடைசி நேரத்தில் கைகொடுத்தவர் தம்பி சூர்யா. அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)