ADVERTISEMENT

கமலின் பிறந்த நாளுக்கு பரிசளிப்பாரா லோகேஷ்?

05:06 PM Oct 31, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'மாநகரம்', 'கைதி' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அப்படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால், தமிழ் சினிமாவின் 'மோஸ்ட் வான்டட்' இயக்குனராக உயர்ந்தார் லோகேஷ். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான விஜயை வைத்து அவர் இயக்கிய 'மாஸ்டர்' படம், வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ரசிகர்கள் அந்த படத்தின் வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த செப்டெம்பர் மாதம் 16 ஆம் தேதி வெளியானது. விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமலின் பிறந்த நாள் வருகிறது. எனவே கமலின் பிறந்தநாள் பரிசாக, படத்தின் பெயரையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT