/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/169_7.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்துள்ளது. மேலும் சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட சில நாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோவை கமல் ரசிகர்கள் உள்பட 'விக்ரம்' பட ரசிகர்களும் தங்களது சமூக வலைதளபக்கத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக 'விஸ்வாசம்' இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது 'விக்ரம்' படம் 'விஸ்வாசம்' படத்தின் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)