ADVERTISEMENT

‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் இதுவா..?

11:29 AM Jul 16, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனை நாயகனாக வைத்து படம் இயக்கவுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இப்படத்திற்கு ‘விக்ரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு சிறு டீசர் வெளியிட்டு படக்குழு அறிவித்தது. சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கமல்ஹாசன் கவனம் செலுத்திக்கொண்டிருந்த வேளையில், இப்படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகளில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுவந்தார். அதன் பிறகு ஏற்பட்ட கரோனா பரவல் காரணமாக படத்தின் பணிகளை முழுவீச்சில் தொடங்குவதில் தடங்கல் ஏற்பட்டது.

தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்துவருவதையடுத்து, படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு தயாராகிவருகிறது. இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என மூவரும் மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், 'விக்ரம்' படத்தில் நடிகர் கமல்ஹாசன் கண் பார்வையற்றவராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘ராஜ பார்வை’ படத்தில் கண் பார்வையற்றவராக கமல்ஹாசன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT