ADVERTISEMENT

கமல் 60 சிறப்பு அழைப்பிதழை பெற்ற சூப்பர் ஸ்டார்... வைரலாகும் புகைப்படம்... 

04:51 PM Nov 13, 2019 | santhoshkumar

நவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள். அத்துடன் அவர் திரைத்துறைக்கு வந்து 60 வருடங்கள் நிறைவாகிறது. கமல்ஹாசன் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக 1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தில் நடித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அவரது பிறந்தநாளானா நவம் 7ஆம் தேதி , கமலின் தந்தை டி.சீனிவாசனின் நினைவு நாளும் கூட, இதனால் அவருடைய சொந்த ஊரான பரமக்குடியில் கமலின் தந்தையின் உருவ சிலையை கமல் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திறந்து வைத்தார். அடுத்த நாளான 8 ஆம் தேதி காலை 9.30க்கு சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலக குருவான இயக்குநர் கே.பாலசந்தரின் சிலையை நடிகர் ரஜினியுடன் திறந்து வைத்தார். இதில் பாலசந்தர் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளை அடுத்து நவம்பர் 9ஆம் தேதி கமலின் 60 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக இசைஞானி இளையராஜாவின் கலை நிகழ்ச்சி மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருந்தன. ஆனால், வானிலை காரணமாக இந்த நிகழ்ச்சி வருகிற 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. நவம்பர் 17 அன்று சென்னை எஸ்.டி.ஏ.டி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நட்சத்திரக் கலைவிழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் உட்சநட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், கமல், விக்ரம், சூர்யா என பலர் கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் முக்கிய நடிகர்களுக்கு கமலின் கெட்டப்புகளுடன் இருப்பதுபோல பெரிய புகைப்படம் வழங்கப்பட்டு, கமல் 60 நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. தற்போது இந்த புகைப்படங்கள் மணிரத்னம், விஜய் சேதுபதி, ரஜினிகாந்திற்கும் வழங்கப்பட்டது சமூக வலைதளத்தில் பரவியது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT