ADVERTISEMENT

ஜப்பானிய மொழியில் வெளியாகும் கைதி... இணையத்தில் வைரலாகும் புதிய போஸ்டர்!

07:08 PM Nov 08, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியிருந்தார். அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கைதி திரைப்படம் ஜப்பானிய மொழியில் வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் படங்கள் மற்றும் பாகுபலி போன்ற சில இந்திய படங்கள் மட்டுமே ஜப்பானிய மொழியில் வெளியான நிலையில் தற்போது கார்த்தி நடித்த கைதி படம் வெளியாகவுள்ளது. வரும் 19 ஆம் தேதி ஜப்பான் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தொடர்பான போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT