ADVERTISEMENT

ஹிந்தியில் ரீமேக் ஆகும் கைதி!

11:42 AM Feb 04, 2020 | santhoshkumar

கடந்த தீபாவளி பண்டிகைக்கு கார்த்தி நடிப்பில் உருவாகி வெளியான படம் கைதி. இந்த படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ஹீரோயின் இல்லாத இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான ஆக்‌ஷன் கதை களத்தில், எந்தவொரு பாடல்களும் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்தார். சாம் சி எஸ் இசையமைடக்க, பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்தார். எஸ்.ஆர். பிரபு இப்படத்தை தயாரித்து வெளியிட்டார்.

இந்த படம் விஜய்யின் பிகில் படத்துடன் ரிலீஸாகி, 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், ‘கைதி’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமே படத்தைத் தயாரிக்கிறது. இதன்மூலம் முதன்முறையாக இந்தியில் கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT