ADVERTISEMENT

'டூ...டூ...டூ...' காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழு கொடுத்த அப்டேட்!

04:48 PM Sep 16, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். சவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பைச் சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படக்குழு, இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தியது. அங்கு முழுவீச்சில் நடந்து வந்த படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை காரணமாகப் பாதியில் தடைப்பட்டது. பின், இயல்புநிலை திரும்பியதும் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்திவருகிறது.

இந்த நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாம் பாடல் வரும் 18ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்ட நிலையில், 'டூ...டூ...டூ...' என்ற பாடல் வரும் சனிக்கிழமை வெளியாகவுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT