ADVERTISEMENT

"இந்த தடவை அது கிடையாது" - ஃபார்முலாவை மாற்றிய நெல்சன்

06:50 PM Jul 03, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 6ஆம் தேதி காவாலா (Kaavaalaa) என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகவுள்ளது. அதற்கான சின்ன ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. முந்தைய நெல்சன் படங்களில் பாடல் உருவாக்கத்தின் போது நடக்கும் நிகழ்வுகளை ஜாலியாக காண்பித்தது போல் இதையும் உருவாக்கியுள்ளார்கள். இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதுகிறார். இப்பாடல் தமன்னா வரும் பாடலாக இருக்கும் என நெல்சன் அந்த வீடியோவில் கூறுகிறார். மேலும் இப்பாடல் குத்து பாடலாக இருக்கும் என ப்ரோமோவை பார்க்கும் போது தெரிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT