rajinikanth Thalaivar169 movie Titled Jailer

Advertisment

'அண்ணாத்த'படத்தைத்தொடர்ந்து மீண்டும்சன்பிக்சர்ஸ்தயாரிக்கும் 'தலைவர் 169' படத்தில் ரஜினிகாந்த்நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கவுள்ள இப்படத்திற்குஅனிருத்இசையமைக்கிறார். படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன்,ரம்யாகிருஷ்ணன் ஆகியோர்நடிக்கவுள்ளதாகக்கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இத்தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் உறுதிபடுத்தி இருந்தார். இப்படத்தைசன்பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் நீண்ட நாளாக எந்த விதமானஅப்டேட்டையும்வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் படத்தின்தலைப்பைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தலைவர் 169 படத்திற்குஜெயிலர்என்றுபெயரிட்டுள்ளதாகப்படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் இரத்தக் கரை படிந்த கத்திபோஸ்டரைபடக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் நடிகர்ரஜினிகாந்தஜெயிலர்கதாபாத்திரத்தில்நடிப்பதாகத்தகவல் வெளியான நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் வகையில்படத்திற்குப்படக்குழுஜெயிலர்என்று பெயரிடப்பட்டுள்ளது.