ADVERTISEMENT

அமோக வரவேற்பு... ஒரே நாளில் மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெய் சுல்தான்' பாடல்!

06:41 PM Mar 30, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சுல்தான்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இது, நடிகர் கார்த்தியின் 19-ஆவது படமாகும். திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைபட்டது. கரோனா நெருக்கடி தளர்வுக்குப் பிறகு, மொத்தக் காட்சிகளையும் படமாக்கி, படப்பிடிப்பை நிறைவுசெய்தது படக்குழு.

‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த படக்குழு, பட வெளியீட்டுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள, 'ஜெய் சுல்தான்' என்ற பாடலின் காணொளி வடிவம் நேற்று வெளியிடப்பட்டது. இப்பாடலுக்கு ரசிகர்களிடையே கிடைத்த அமோக வரவேற்பால் பாடல் வெளியாகி 24 மணி நேரங்களைக் கடப்பதற்கு முன்னரே ஒரு மில்லியன் பேரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. மேலும், யூ-டியூப் ட்ரெண்டிங்கிலும் முன்னேறி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT