s r prabhu

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரித்திருந்தார்.

Advertisment

இப்படம் வெளியான சமயத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவிடம் 'கைதி' படத்தின் அடுத்த பாகம் உருவாகுமா எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எஸ்.ஆர். பிரபு, நிச்சயம் கைதி இரண்டாம் பாகம் உருவாகுமென்றும் அது 'கைதி' முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்குமென்றும் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் நடைபெற்ற ஓர் உரையாடலில் எஸ்.ஆர். பிரபு கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது 'கைதி 2' குறித்து அவர் பேசுகையில், லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி இருவரும் முன்னர் ஒப்புக்கொண்டுள்ள படங்களை நிறைவுசெய்த பிறகு 'கைதி 2' நிச்சயம் உருவாகுமெனத் தெரிவித்தார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளதும், நடிகர் கார்த்தி மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்துவருவதும் குறிப்பிடத்தக்கது..