ADVERTISEMENT

இந்தியாவில் தொடங்கியது 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' படத்தின் கொண்டாட்டம்

04:00 PM Dec 13, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கற்பனை கதாபாத்திரங்களான சூப்பர் ஹீரோக்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கென்றே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் ஸ்பைடர் மேன் படத்திற்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர் மேன் ஃபார் ஃபரம் ஹோம்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' என்ற தலைப்பில் அடுத்த பாகத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இதில் 'ஸ்பைடர் மேன் ஃபார் ஃபரம் ஹோம்' படத்தில் நடித்த டாம் ஹாலண்ட், ஜெண்டயா, வில்லெம் டஃபோ உள்ளிட்ட பலரும் இப்படத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தை மார்வெல் ஸ்டூடியோ, கொலம்பியா பிக்சர்ஸ், பாஸ்கல் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' திரைப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் ஒரு நாளுக்கு முன்பாக டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது

இந்நிலையில் இந்தியா முழுவதும் 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. நேற்று மாலை ஹைதராபாத் பிரசாத் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் முன்பதிவு திறக்கப்பட்ட 2 மணி நேரத்தில் ஐந்தாயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் எர்ணாகுளம், கோழிக்கோடு, திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களில் அதிகாலை 5 மணிக்குத் துவங்கும் சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட்கள் திறக்கப்பட்ட சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது. அமெரிக்காவை போலவே தென்னிந்தியாவிலும் 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT