ADVERTISEMENT

“அமேசிங் ட்ரைலர்” நண்பா; ஆவலின் உச்சத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின்

01:22 PM Feb 05, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியத்தில் 'எஃப்.ஐ.ஆர்.' படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துள்ள நிலையில் இப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் 'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் ட்ரைலரை பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "அமேசிங் ட்ரைலர்”, இப்படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன் நண்பா. உனது கதை தேர்வு எப்போதும் போல என்னை ஆச்சரியப்பட வைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT