ADVERTISEMENT

சர்ச்சையில் சிக்கிய இளையராஜா; வலுக்கும் கண்டனங்கள்

10:51 AM Apr 16, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அது தற்போது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள முன்னுரையில், "பிரதமர் மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியை பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி இருக்கிறார். முத்தலாக் சட்டம், 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இதுபோன்ற மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மோடியையும் அம்பேத்காரையும் ஒப்பிடுவது தவறானது என்று கூறி சமூக வலைதளங்களில் இளையராஜாவின் பேச்சுக்கு பலரும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT