Ilayaraja not participate modi and ambedkar book launch

Advertisment

ப்ளூ கிராப்டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதிய முன்னுரை தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும், இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும்இருவேறு கருத்துக்களை மாறி மாறி தெரிவித்தனர். இதன்பிறகுஇளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் மோடியும் அம்பேத்கரும்என்ற புத்தகம்இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் புத்தகத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன், குஷ்பு மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை. இது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.