ADVERTISEMENT

‘ஹ்ரிதயம்’ பட இயக்குநரின் அடுத்த பட ட்ரெயிலர் வெளியீடு!

07:40 PM Mar 21, 2024 | mathi23

பிரபல மலையாள எழுத்தாளரும், நடிகருமான ஸ்ரீனிவாசன் மகன் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் ‘ஹ்ரிதயம்’ படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் பாடகர், நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர். வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ஹ்ரிதயம் படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். இளைஞர்களின் கல்லூரி காதலையும், அதற்கு பிந்தைய வாழ்க்கையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்றாலும், ஓடிடியில் வெளியான பிறகே கூடுதல் வரவேற்பை பெற்றது.

ADVERTISEMENT

‘ஹ்ரிதயம்’ படத்தை தொடர்ந்து, அதே கூட்டணியை உருவாக்கி இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன், ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், நிவின் பாலி உள்ளிடோர் நடித்துள்ளனர். விசாக் சுப்பிரமணியன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஹ்ரிதயம் படத்தைப் போலவே, இப்படத்தில், சென்னையின் வாழ்வியலை காட்சி படுத்தியிருப்பதாக டீசரில் இடம்பெற்றிருக்கிறது. இப்படத்தை வரும் ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT