Skip to main content

மகன் படத்துக்காக ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த மோகன் லால் 

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

mohanlal talk about hridayam movie

 

பிரபல மலையாள எழுத்தாளரும், நடிகருமான ஸ்ரீனிவாசன் மகன் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் 'ஹ்ரிதயம்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். மலையாள பிரபலங்களின் வாரிசுகள் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு சினிமா விமர்சகர்களிடம் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. 

 

ad

 

இந்நிலையில் இப்படத்தை பார்த்து பாராட்டிய மோகன் லால் தனது சமூக வலைதள பக்கத்தில், "பிரியதர்ஷன், ஸ்ரீனிவாசன் மற்றும் என்னுடைய குழந்தைகள் அனைவரும் இப்படத்தில் இதயபூர்வமாக இணைந்துள்ளனர். இப்படம் நம் இதயத்திற்கு நெருக்கமான ஒரு படமாக இருக்கும். இப்படம் உங்கள் அனைவருக்கும் உற்சாகத்தை தரும் என்று நான் உறுதியாக கூறுகிறேன். சினிமாவைச் சேர்ந்த ஒருவனாக நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். சினிமா துறை இக்கட்டான சூழலில் இருக்கும் இந்தத் தருணத்தில் இயன்றவரை கலைஞர்களுக்கு ஆதரவு கொடுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

‘ஹ்ரிதயம்’ பட இயக்குநரின் அடுத்த பட ட்ரெயிலர் வெளியீடு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
'Hridayam' director's next trailer release!

பிரபல மலையாள எழுத்தாளரும், நடிகருமான ஸ்ரீனிவாசன் மகன் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் ‘ஹ்ரிதயம்’ படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் பாடகர், நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர். வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ஹ்ரிதயம் படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். இளைஞர்களின் கல்லூரி காதலையும், அதற்கு பிந்தைய வாழ்க்கையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்றாலும், ஓடிடியில் வெளியான பிறகே கூடுதல் வரவேற்பை பெற்றது.

‘ஹ்ரிதயம்’ படத்தை தொடர்ந்து, அதே கூட்டணியை உருவாக்கி இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன், ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், நிவின் பாலி உள்ளிடோர் நடித்துள்ளனர். விசாக் சுப்பிரமணியன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஹ்ரிதயம் படத்தைப் போலவே, இப்படத்தில், சென்னையின் வாழ்வியலை காட்சி படுத்தியிருப்பதாக டீசரில் இடம்பெற்றிருக்கிறது. இப்படத்தை வரும் ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.