ADVERTISEMENT

கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

03:23 PM Nov 24, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில நாட்களாக இருமல், சளி இருந்ததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நடிகர் கமலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு கரோனா சிகிச்சை நடைபெற்றுவருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT