உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்த போதிலும் தமிழகத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Advertisment

 Perambalur corona lockdown

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பெரம்பலூரில் ஏப்.27 வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி உட்பட அனைத்து கடைகள் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் 3 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூர் பகுதியில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.