ADVERTISEMENT

சமந்தா படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலம் 

02:27 PM Mar 21, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா தற்போது 'யசோதா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரி நாராயணன் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். மணிசர்மா இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் மதுபாலாவாக நடிக்கிறார்.

இப்படத்தில் அதிரடி சண்டை காட்சியில் சமந்தா நடிக்க உள்ள நிலையில் ஸ்டண்ட் இயக்குநராக ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமந்தா நடிப்பில் வெளியான பேமிலி மேன் 2 தொடரில் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றிய நிலையில் தற்போது யாசோதா படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார். ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென்னுடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT