vijay devarakonda about samantha

'ஸ்ரீ தேவி மூவிஸ்' நிறுவனம் தயாரிப்பில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யசோதா'. இப்படத்தை ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இருவரும் இணைந்து இயக்குகின்றனர். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது.

Advertisment

இந்நிலையில் 'யசோதா' படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த ட்ரைலரை பார்க்கையில், குழந்தை பெற்றுக்கொடுக்கும் வாடகைத்தாயாக சமந்தா நடித்துள்ளது போலவும், மேலும் இந்த முறையை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது போலவும் தெரிகிறது. அந்த மோசடி கும்பலை பற்றி விரிவாக சொல்லியிருப்பது போல் அமைந்துள்ளது இந்த டீசரின் காட்சிகள். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடமொழிகளில் வருகிற நவம்பர் 11ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

Advertisment

இதனிடையே இந்த ட்ரைலரை தமிழில் சூர்யாவும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும், மலையாளத்தில் துல்கர் சல்மானும் இந்தியில் வருண் தவானும் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தெலுங்கில் ட்ரைலரை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா, "நான் கல்லூரி படிக்கும் போது, சமந்தாவை முதன் முதலில் பெரிய திரையில் பார்த்தேன். அப்போதே விழுந்துவிட்டேன். இன்றைக்கும் அவர் ரசிக்க வைக்கிறார்." என குறிப்பிட்டுள்ளார். விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் இணைந்து 'குஷி' என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படம் டிசம்பர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.