ADVERTISEMENT

"இதற்கெல்லாம் அஞ்சற ஆளா அவரு..." - நடிகர் கமல்ஹாசன் பேச்சு

10:55 AM Oct 29, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற 'செம்பி' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், "அந்த மாதிரியான பறவைதான் நான். அதுக்காகத்தான் நான் இங்க வந்திருக்கேன். ஏன்னா எனக்கு புடிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க. தயாரிப்பாளரைத் தெரியும். டைரக்டர் சொன்னாரு தோள்ல கை, கை குலுக்கி ஆரம்பிச்சேன்; தோள்ல கை இருக்குணு. எப்போதுமே அது அங்கு இருக்கும். நல்ல படங்களை எடுங்கள்; நான் கைய எடுக்க மாட்டேன். ஏன்னா என்னுடைய விமர்சனம், அந்த கைய எப்ப தோள்ல இருந்து நகருதுனு நீங்க பாத்துட்டே இருங்க. அப்ப படம் நல்லா எடுக்குலனு அர்த்தம்.

நீங்க அதைத் தொடர்ந்து செய்திட்டு இருக்கிங்க. அதனால நான் இதைத் தட்டிக் கொடுக்க வேண்டியது எனது கடமை. இப்ப எல்லாரும் சொல்லிட்டு இருந்தோம்ல, இவர் பாத்து நடிக்க கத்துக்கோங்க, அதெல்லாம் கத்துக்காதிங்க. இது வேறு கலை; பரிமாணம் எங்கயோ போகுது. எரிமலை மாதிரி வெடிச்சு சிதறிட்டு இருக்கு. பெரும் திறமையாளர்க்கெல்லாம் நான் தினமும் அமெரிக்காவில் போகும்போதெல்லாம் வியந்திருக்கன். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டெல்லாம் பாத்துட்டு நான் கை தட்டியிருக்கேன். நீங்க போற வழி கரெக்ட்டு தான். நீங்க அப்படியே போயிட்டே இருங்க.

நாம யாருமே அரங்கேறுவதில்லை. ஒத்திகைதான் பாத்துட்டு இருக்கோம். அடுத்த தலைமுறைதான் அரங்கேறும். நம்முடைய ஒத்திகையெல்லாம், அவர்களுடையதாகட்டும், என்னால் செய்ய முடியாதது என்பது நிறைய இருக்கு. அதெல்லாம் உங்கள் சொத்து. அத நீங்க எடுத்துக்கோங்க. இது அவை அடக்கமில்ல. நிஜமிருந்ததனால் 63 வருடங்கள், இந்த சினிமா என்னை கட்டித் தழுவிக் கொண்டு, என்னைக் குழந்தையாகப் பார்த்துக் கொண்ட, அந்த நன்றியுடன் சொல்கிறேன். எங்க வேணும்னாலும் கத்துக்கலாம்.

சதிலீலாவதி படத்த பத்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதுல எனக்கு கோவை மொழிக்கு வாத்தியார் சரளா. தசாவதாரம்னு ஒரு படம், அதற்கு சாட்சி டைரக்டரே இங்கு இருக்கிறார். அதில் ஃபிளட்சருக்கு குரு எனது மகள் ஸ்ருதி. எப்படி பேசணும்னு டைரக்டர்ட்ட சொல்லி, ரீடேக் பண்ணுங்க, சரியா சொல்லி மறுபடியும் பேசுங்கன்னு பேச வச்சாங்க. பணிவுடன் அதை செய்தேன். இங்க எல்லாரும் பிரமாதமா தேர்வு செய்து வச்சிருக்கிங்க. அஸ்வினுக்கு அற்புதமான கேரக்டர். இதில் தம்பி ராமையாவின் விசில் எச்சில் இன்னும் காயல. அது அவருக்கு தான் புரியும். உங்களுக்கு படம் பார்க்கும் போது புரியும்.

பழ. கருப்பையா கூட்டம், லைட்டு, மைக்கு இதற்கெல்லாம் அஞ்சற ஆளா அவரு. அசால்ட்டா அடிப்பாரு. யாரை அடிக்கணும்னு பயமே இல்லாம அடிப்பாரு. அதே மாதிரி தான் நாஞ்சில் அண்ணாவும். இந்த படத்துல இரண்டு பேரையும் போட்ருக்காங்க. நான் ரசித்துப் பார்த்தேன். ஏன்னா அந்த மேடைகள்ல எப்படி பேசறாங்கனு பார்ப்பதற்கு நான் இங்கு இருந்து பார்ப்பதற்கு வாய்ப்பு குறைவு. அரசியல் மேடையில சொல்றேன். அதனால இவங்க பேசும் போது, ஓகே ஜாக்கிரதையா பேசுனுங்கறதெல்லாம், இந்த படத்தைப் பார்க்கும் போது அதில் பாடமாக வருகிறது." இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT