ADVERTISEMENT

தனுஷ் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

03:59 PM Jun 17, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாக வம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'வாத்தி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி 'வாத்தி' படத்தின் இசைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து தனுஷுடன் இருக்கும் ஒரு புதிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தனுஷின் நடனத்துடன் கூடிய ஒரு குத்துப்பாட்டு உருவாகி வருவதாகவும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT