ADVERTISEMENT

ஜி.வி. பிரகாஷின் மேல் முறையீட்டு மனு - நீதிமன்றம் புது உத்தரவு

06:26 PM Mar 10, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது படைப்புகளுக்கு ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என ஜிஎஸ்டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அந்த நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் ஜி.வி. பிரகாஷ். அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். அதில் காப்புரிமைக்கு தயாரிப்பாளர்கள் உரிமையாளர் ஆகிவிடுவதால் தன்னிடம் வரி வசூலிப்பது சட்ட விரோதம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜி.வி. பிரகாஷ்குமாரின் மேல் முறையீட்டு மனு குறித்து நான்கு வாரங்களில் வருமான வரித்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்தகட்ட விசாரணையை தள்ளி வைத்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT