ADVERTISEMENT

சோழ தேசத்தில் பிரமாண்ட விழா ; 'பொன்னியின் செல்வன்' படக்குழுவின் மெகா திட்டம்

12:48 PM Jun 08, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் 500 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்தது.

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன் 1' படத்தின் டீசர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் டீசர் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும் இதனை பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த பிரமாண்ட விழா, தஞ்சையில் நடத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் கதைக்களத்திற்கும் சோழதேசமான தஞ்சை மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இந்த விழாவை அங்கு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT