ponniyin selvan vikram replies to fans tweet

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன் 1' படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படம் திரைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழு.

Advertisment

இந்நிலையில் விக்ரம் ட்விட்டரில் ரசிகர் ஒருவரின் பதிவிற்கு பதிலளித்துள்ளார். அந்த ரசிகர், "அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் மூத்த குடிமக்களிடம் நட்பாக இருங்கள். பல வருடங்களாக திரையரங்குகளுக்கு வராத பாட்டிமார்கள் 'பொன்னியின் செல்வன்1' படத்தை பார்க்க வருவார்கள். கடந்த 40 வருடங்களில் திரையரங்கிற்கு வராத என் அம்மா வரவுள்ளார்." என குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்த பதிவிற்கு விக்ரம், "அன்பும் அக்கறையும் கலந்த இந்த பதிவிற்கு நன்றி. நிறைய மகன்கள் மற்றும் மகள்கள் தங்கள் பெருமைமிக்க வரலாற்றை பெரிய திரையில் பார்க்க தங்கள் தாய்மார்களையும் அப்பாக்களையும் அழைத்து வருவார்கள். என் அம்மாவும் திரையரங்கிற்கு சென்று பார்க்கவுள்ளார்." என பதிலளித்துள்ளார்.