ADVERTISEMENT

"எனக்கு பொண்ணுங்களோட கால்கள் ரொம்பப் பிடிக்கும்" - கெளதம் மேனன் சொன்னது யாரிடம்...

11:59 PM Oct 01, 2019 | vasanthbalakrishnan

சென்னை லயோலா கல்லூரியின் விஸ்காம் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இயக்குனர் கெளதம் மேனன் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


"இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு முன்பாக பல முக்கிய கலைஞர்கள் பங்கேற்றார்கள் என்பதை அறிந்தேன். இயக்குனர் பால்கி, ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நான் வியந்து போற்றும் கலைஞர்கள். கமல்ஹாசனின் பெரும் ரசிகன் நான். ஆனால், அவர் இப்போது முற்றிலும் வேறுபட்ட ஒரு துறையில் கால் பதித்துள்ளார். அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். அவரை வாழ்த்த எனக்கு தகுதி இல்லை. அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அவரை ஒரு நடிகராகத்தான் பார்க்க விரும்புகிறேன்" என்று தனது பேச்சைத் தொடங்கிய கெளதம் மேனன், மாணவர்கள் தாங்கள் விரும்பும் கேள்விகளை கேட்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஒரு மாணவர் கெளதம் மேனனின் படங்களில் நாயகிகளின் கால்கள் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுக் காட்டப்படுவதை க்வெண்டின் டொரென்டினோ படங்களுடன் ஒப்பிட்டு கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த கெளதம், "எனக்கு க்வெண்டின் டொரென்டினோவின் படங்கள் பிடிக்காது. எனக்கு பொண்ணுங்க கால்கள் ரொம்ப பிடிக்கும். அதுனாலதான் நான் அப்படி காட்சிகள் வைக்கிறேன்" என்று கூற மாணவர்கள் மத்தியில் பெரும் குதூகலம் ஏற்பட்டது. தொடர்ந்து, "ஏன், உங்களுக்கு பொண்ணுங்க கால் பிடிக்காதா?" என்று அம்மாணவரை கேட்டார் கெளதம். அதற்கு அவர் "நல்ல காலா இருந்தா பிடிக்கும்" என்றார். உடனே "எல்லா காலும் நல்ல கால்தான். எல்லா பொண்ணும் நல்ல பொண்ணுதான்" என்று கூறி முடித்தார் கெளதம்.



இப்படி மாணவர்களின் பிற கேள்விகளுக்கும் கலகலப்பாகவும் தன்னுடைய ஸ்டைலிலும் பதிலளித்த கௌதமிடம், "உங்கள் நாயகர்கள் அனைவரும் பணக்காரர்களாக, படித்தவர்களாக, எல்லா வசதிகளும் அமையப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எப்போது ஒரு முழு கிராமப் பின்புலத்தில் கிராம நாயகனை படமாக்குவீர்கள்?" என்று ஒரு மாணவி கேட்க, "நான் கோபமாகப் பேசுகிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் சொன்னது போன்ற படங்களை எனக்கும் பார்க்கப் பிடிக்கும். அதை எடுக்க சிறந்த இயக்குனர்கள் இருக்கிறார்கள். பாரதிராஜா சார், அமீர் சார் போன்றவர்கள் இயக்கிய அத்தகைய படங்களை நான் ரசித்திருக்கிறேன். ஆனால், நான் அப்படி ஒரு படத்தை எடுக்கமாட்டேன். என் படங்களின் அத்தனை நாயகர்களும் பணக்காரர்கள் அல்ல. உதாரணத்திற்கு 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் ஜீவா பணக்காரர் அல்ல, அவர் ஒரு மிடில் கிளாஸ் இளைஞர். நான், நம்மை போன்ற மிடில் கிளாஸ்காரர்களை நாயகனாக்குகிறேன்" என்று கூறினார்.

வேல்யூ ஆடட் தகவலாக தன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 15ஆம் தேதி கண்டிப்பாக வெளிவரும் என்று தெரிவித்து மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தி சென்றார் கெளதம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT