Lyca files case against director Shankar

நடிகர் கமல் நடிப்பில் 'இந்தியன் 2' திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.இந்நிலையில், லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதைத் தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்திருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்துத் தர வேண்டுமென ஷங்கருக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில் இதுவரை 14 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் லைக்காவின் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்தவும் தயாராக இருப்பதாகமனுவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, “இயக்குனர் சங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, பிற படங்களை இயக்கக் கூடாது என ஷங்கருக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார்”. வழக்கு குறித்து இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Advertisment