ADVERTISEMENT

முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்த தர்ஷன்-லாஸ்லியா படக்குழு!

06:37 PM Mar 12, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்'. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைவசம் வைத்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தமிழில் இயக்குவதற்கான வாய்ப்பை தனது உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.

தமிழில் ‘கூகுள் குட்டப்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். பிக்பாஸ் புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் கடந்த மாத இறுதியில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், தற்போது முதற்கட்டப் படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT