துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஷெரின். இந்தப் படத்தை தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தார்.

Advertisment

sherin

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-

ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-

responsive="true">

Advertisment

கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் சீஸன் 3 போட்டியில் ஷெரின் பங்குபெற்றதன் மூலம் மீண்டும் பிரபலமடைந்தார் ஷெரின். மேலும் அந்தப் போட்டியில் தன்னுடன் பங்குபெற்ற சக போட்டியாளரான தர்ஷன் மீது ஷெரினுக்கு காதல் இருப்பதாக பேசப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகையும் தர்ஷனின் முன்னால் காதலியுமான ஷனம் ஷெட்டி தன்னைதர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாக போலீஸில் புகாரளித்தார். இதனையடுத்து ஷனம், ர்ஷன் இருவரும் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளைக் வைத்தனர்.

Advertisment

தர்ஷனுடன் பிரிந்ததற்கு காரணம் ஷெரின் தான் என்று பல பேட்டிகளில் பேசியுள்ளார் ஷனம்ஷெட்டி. இதுவரை இந்த விமர்சனங்களுக்கு எதுவும் பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்த ஷெரின் தற்போது தனது இன்ஸ்டாவில் இதுகுறித்து பெரிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “கடந்த ஒரு மாதமாக என்னைப் பற்றி அதிகம் பேசப்பட்டுவிட்டது. என்னை யாராவது தாக்கிப் பேச வேண்டும் என்றால் அதை செய்யுங்கள். நான் அதற்கு ஒப்புதல் தருகிறேன். என் மீதான மோசமான விமர்சனத்தை புன்னகையுடன் கடந்து செல்கிறேன். ஆனால் என்னுடைய குடும்பத்தை விட்டுவிடுங்கள்.

முகம் தெரியாத போலி சமூகவலைத்தள கணக்குகளை வைத்துக் கொண்டு வசைபாடுவதையும், ட்ரோல் செய்வதையும் ஏற்க முடியாது. அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை.

யாரோ செய்த தவறுக்காக என்னை பழி சொல்வது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தாது. அதில் உங்களது குறுகிய மனப்பான்மை தான் வெளிப்படுகிறது. நான் அமைதியாக இருப்பது என்னுடைய பலவீனமாக நினைக்க வேண்டாம். நான் இந்த விவகாரத்தில் தொடர்பில்லாததால் பேசாமல் இருக்கிறேன்.

இரண்டு பேர் காதல் முறிவு (பிரேக் அப்) செய்து கொள்வதை விட முக்கிய பிரச்னைகள் இந்த உலகத்தில் உள்ளன. இதில் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. தவறான பதிவுகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று எனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். கோபமாக இருப்பவர்களுக்கு எனது கமெண்ட் பகுதியில் அதைக் கொட்டித் தீர்ப்பது அவர்களுக்கு அமைதியைக் கொடுக்கும் என்றால் அதை அவர்கள் செய்யட்டும்.

அது என்னையும் என்னுடைய மதிப்பீடுகளையும் மாற்றாது. எனக்காக சண்டை போடுபவர்களும், என்னுடன் சண்டை போடுவபர்களும் கிடைத்ததால் நான் அதிர்ஷ்டசாலி தான். இதுதான் என்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கை. இதைப்பற்றிய கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் நான் இனி பதில் சொல்லமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.