ADVERTISEMENT

’ஜென்டில்மேன் 2' ; மேலும் ஒரு பிரபலத்தை புக் செய்த படக்குழு

06:34 PM Jun 23, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

1993-ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’ஜென்டில்மேன்'. இயக்குநர் சங்கரின் முதல் படமான இப்படத்தில் கவுண்டமணி, மதுபாலா, மனோரம்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்திருந்தார். கே.டி. குஞ்சுமோன் பல வெற்றிப் படங்களை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்தவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்' சார்பாக 'ஜென்டில்மேன் 2' படத்தைத் தயாரிக்கவுள்ளார். நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக நடிக்க கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்கவுள்ளார்.

இந்நிலையில் ’ஜென்டில்மேன் 2' படத்தின் புதிய அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படத்தின் கலை இயக்குநராகப் பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தோட்டா தரணியோடு இணைந்து அவரது மகள் ரோகிணி தரணியும் இப்படத்தில் பணியாற்றவுள்ளார். இதனைப் படத்தின் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT