/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/482_3.jpg)
1993-ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’ஜென்டில்மேன்'. இயக்குநர் சங்கரின் முதல் படமான இப்படத்தில் கவுண்டமணி, மதுபாலா, மனோரம்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்திருந்தார். கே.டி. குஞ்சுமோன் பல வெற்றிப் படங்களை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்தவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு 'ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்' சார்பாக 'ஜென்டில்மேன் 2' படத்தை தயாரிக்கவுள்ளார். நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக நடிக்க கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்கவுள்ளார் என சமீபத்தில் படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் ’ஜென்டில்மேன் 2' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி அஜயன் வின்சென்ட் ’ஜென்டில்மேன் 2' படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இதனை படத்தின் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அஜயன் வின்சென்ட், ஏற்கனவே கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான 'ரட்சகன்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)