ADVERTISEMENT

“நிறைய கற்றுக்கொண்டேன்...” - அனுபவம் பகிர்ந்த கௌதம் மேனன்

05:19 PM Oct 25, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. பின்பு அனைத்து பிரச்சனைகளும் முடிந்து படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தது.

ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகிய நிலையில், படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. பின்பு வருகிற நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தெரிவித்து ஒரு சின்ன ட்ரைலரை படக்குழு வெளியிட்டது. சமீபத்தில் இப்படத்தின் புதிய ட்ரைலரை விஜய்யின் லியோ பட திரையரங்குகளில் பிரத்யேகமாகத் திரையிடப்பட்டு வந்தது. இதையடுத்து யூட்யூபில் நேற்று வெளியாகியது.



இந்த ட்ரைலருக்கு எக்ஸ் தளம் மூலம் வாழ்த்து தெரிவித்த திரைப் பிரபலங்களுக்கு நன்றி கூறி வருகிறார் கௌதம் மேனன். அந்த வகையில் பயனாளி ஒருவர், துருவ நட்சத்திரம் படம் ஆரம்பிக்கும் போது தான் கல்லூரி 2 ஆம் ஆண்டு படித்து வந்ததாகவும் இப்போது 3 வருட அனுபவத்துடன் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டு வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவிற்கு பதிலளித்த கௌதம் மேனன், "படம் ஆரம்பித்த பிறகு நிறைய கற்றுக்கொண்டேன். 3 படங்கள், 4 ஆந்தாலஜி குறும்படங்கள், 5 மியூசிக் வீடியோக்களை இயக்கி வெளியிட்டுள்ளேன். மேலும் 6வது அறிவை வளர்த்துக் கொண்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஹலிதா ஷமீம் உள்ளிட்டோர் ட்ரைலருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT