ADVERTISEMENT

"தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறது" - சல்மான் கானை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

12:54 PM Apr 10, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாலிவுட் நடிகர் சல்மான் கான், தற்போது 'டைகர் 3', 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ வருகிற 21ஆம் தேதி (21.04.2023) வெளியாகவுள்ளது. இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் வெங்கடேஷ் டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஃபர்ஹாத் சம்ஜி இயக்கியுள்ள இப்படத்திற்கு பாயல் தேவ் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தின் இந்தி ரீமேக்காகும்.

இப்படத்தின் 'யென்டாம்மா...' (Yentamma) பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்பாடல் குத்து பாடலாக சல்மான் கான் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. இப்பாடலில் ராம் சரண் ஒரு கேமியோ ரோலில் வந்து 'நாட்டு நாட்டு' பாடல் நடனம் போல் சல்மான் கான், வெங்கடேஷ் டகுபதியுடன் இணைந்து நடனமாடுகிறார். வேஷ்டி சட்டையில் நடனமாடியுள்ள சல்மான் கான், வேஷ்டியை தொடை தெரியும்படி மடித்து கட்டி ஒரு ஸ்டெப் போடுகிறார். அது பலராலும் ட்ரோல் செய்யப்பட்டு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் சல்மான் கானின் நடனம் குறித்து விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "இது மிகவும் கேலிக்குரியது மற்றும் நமது தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறது. இது லுங்கி அல்ல, இது வேஷ்டி. கிளாசிக்கல் உடையை அருவருப்பாக காட்டியுள்ளனர்." என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT