actress somy ali complaint about his ex boy friend salman khan

Advertisment

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகரான சல்மான் கான் தற்போது 'டைகர்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதோடு சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் சல்மான் கான், தொடக்க காலகட்டத்தில் இருந்தே பல நடிகைகளுடன் டேட் செய்து வருவதாக பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது.

அந்த வகையில், சல்மான் கான் சில வருடங்களுக்கு முன்பு நடிகை சோமி அலியுடன் டேட் செய்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் நடிகையான சோமி அலி நேற்று தனது சமூக வலைதளபக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான 'மைனே பியார் கியா' படத்தின் போஸ்டரை பகிர்ந்து, "அவர் பெண்களை துன்புறுத்துபவர். நான் மட்டுமின்றி பலரும் துன்புறுத்தப்பட்டுள்ளோம். அவரை கொண்டாடுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு எதுவும் தெரியாது" என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்தப் பதிவை பதிவிட்ட 24 மணி நேரத்திற்குள் நீக்கியுள்ளார். சோமி அலியின் இந்த செயல் தற்போது பாலிவுட் திரை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.