ADVERTISEMENT

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் போட்டியாளர்களின் கடைசி லிஸ்ட்!

05:26 PM Oct 31, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து, வருகிற நவம்பர் 22ஆம் தேதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. சென்னை அடையாறு ஜானகி கல்லூரியில் 22 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்தத் தேர்தலில் போட்டியிட உள்ளவர்களின் பட்டியலைத் தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் பி.எல் தேனப்பன் மட்டும் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

செயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் ஜே.சதீஷ்குமார் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.

மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, ப்ரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிடவுள்ளனர்.

இந்தமுறை தேர்தலில் முன்னணித் தயாரிப்பாளர்கள் பெரும்பாலானோர் போட்டியிடவில்லை. பாரதிராஜா தலைமையில் நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் என ஒரு புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்தச் சங்கத்தில் பல முன்னணித் தயாரிப்பாளர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT