ADVERTISEMENT

பிரபல தமிழ் ஹீரோவிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்!

01:39 PM Dec 02, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் கார்த்திக். இவரது மகன் கௌதம் கார்த்திக், மணிரத்தினத்தின் 'கடல்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், வை ராஜா வை, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, இயக்குனர் எழில் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், இன்று காலை கெளதம் கார்த்திக், சென்னை டி.டி.கே. சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்குவந்த மர்மநபர்கள், கெளதம் கார்த்திக்கின் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் வழக்குப்பதிவு செய்து, செல்போனை பறித்து சென்றவர்களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT