ADVERTISEMENT

போதைப்பொருள் வழக்கு ; 6000 பக்க குற்றப்பத்திரிகையில் காணாமல் போன ஆர்யன் கானின் பெயர்

04:51 PM May 27, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த வருடம் அக்டோபர் 2ம் தேதி மும்பையிலிருந்து கோவா செல்லக்கூடிய சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் பலமுறை நீதிமன்றத்தை நாடிய நிலையில் கைது செய்யப்பட்டு 21 நாட்களுக்குப் பிறகு ஆர்யன் கானுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. மேலும், இந்த வழக்கில் ஆரியன் கானுடன் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. மும்பை வடக்கு மண்டல துணை இயக்குநர் ரவி போரா தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழுவினர் ஆர்யன் கான் தொடர்பான வழக்கைக் கடந்த சில மாதங்களாகத் தீவிரமாக விசாரித்து வந்தனர். "ஆர்யன்கான் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை மற்றும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் ஆர்யன் கானுக்கும் தொடர்பு இல்லை" என்று அக்குழுவினர் தெரிவித்திருந்தனர். கடந்த மார்ச் மாதம் போதை பொருள் சிறப்பு பிரிவு இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருந்தது. பின்பு நீதிமன்றத்தில் 90 நாள் அவகாசம் கேட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 60 நாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது ஆர்யன் கான் நிரபராதி என தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் ஆர்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை, அவரிடம் போதை பொருள் இல்லை என குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக ஆர்யன் கான் உள்பட ஐந்து பேரின் பெயரும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை. மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் 6,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை அந்த அமைப்பு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT