Skip to main content

பாஜக பிரமுகர்கள் வந்தது ஏன்? - மகாராஷ்டிரா அமைச்சர் கேள்வி!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

Why did BJP figures come? - Maharashtra Minister Question

 

மும்பையில் கடந்த அக்.02 அன்று கோவா செல்லக்கூடிய சொகுசுக் கப்பல் ஒன்றில் பார்ட்டி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பார்ட்டியில் பங்கேற்றவர்களைக் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், அக்.03 காலை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன்கானை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்று 20 மணிநேர  விசாரணைக்குப் பின் ஆர்யன்கானை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரும் மும்பை விசாரணை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அக்.7 வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு உரியவர்களிடம் விசாரணை நடைபெற்றது. 

 

ஆர்யன் கானை விசாரணைக்காக அழைத்து செல்லும்பொழுது உடன் கே.பி. கோசாவி என்ற நபரும் செல்வதாக தேசியவாத காங்கிரஸின் செய்தி தொடர்பாளரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்யன்கானுடன் செல்லும் கே.பி.கோசாவி தன்னை பாஜக துணைத்தலைவர் என குறிப்பிட்டுள்ளதாகவும் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் நவாப் மாலிக் கூறியுள்ளார். இதற்கிடையே ஆர்யன்கானை விசாரணைக்கு அழைத்து சென்ற போது உடனிருந்தவர்களுள் ஒருவரான மணிஷ் பன்ஷாலி என்பவர் தான் பாஜகவின் விசுவாச தொண்டர் என்றும் போதை மருந்து கட்டுப்பாடு துறையில் ஒரு பகுதியாக இருந்து அவர்களுக்கு தகவல்களை வழங்கி வந்ததாகவும் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.  

 

இந்த நிலையில் மும்பை சொகுசு கப்பலில் போதைப் பொருள் இருந்ததாக நடத்திய சோதனையே ஒரு நாடகம். இந்த சோதனையானது நடிகர் ஷாருக்கானுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக அவரது மகன் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்யன் கானை சந்திக்க வந்த கே.பி. கோசாவி அவருடன் செல்பி எடுத்து கொண்ட காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு வந்து சென்றதை மணிஷ் பன்ஷாலியும் ஒப்புக்கொண்டார்.  இதற்கிடையில் ஆர்யன் கான் நண்பன் அர்ப்பாஸ் மெர்சண்ட் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னிடம் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என சிசிடிவி காட்சிகளை பார்த்தாலே தெரியும் என்றும் தான் இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

திருமணத்தை மீறிய உறவினால் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened to children caused by extramarital affairs in maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபா (25), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகள், 3 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வெளியே சென்றிருந்த தீபாவின் கணவர் மாலை வீடு திரும்பினார். அப்போது, தீபாவின் கணவர் தனது குழந்தைகளை எழுப்ப முயன்றார். அப்போது, குழந்தைகள் அயர்ந்து தூங்குவதாகவும், அவர்களை எழுப்ப வேண்டாம் என்றும் தீபா கூறியுள்ளார். இதனை கேட்ட தீபாவின் கணவர், அவர்களை எழுப்பாமல் இருந்துள்ளார்.

பின்னர், வெகுநேரம் ஆகியும் எந்தவித அசைவும் குழந்தைகளிடத்தில் இல்லாததைக் கண்டு சந்தேகம் அடைந்த தீபாவின் கணவர், குழந்தகளை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு, குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து போன 2 குழந்தைகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பிரேத பரிசோதனையில், குழந்தைகள் கொலை செய்யப்பட்டு இறந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அதில், தீபா போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், தீபாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், தீபாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனையடுத்து, அந்த இளைஞருடன் வாழ நினைத்த தீபா, அதற்கு தனது குழந்தைகள் இடையூறாக இருப்பதாக உணர்ந்துள்ளார். இதனால், காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன், திரும்பி வருவதற்குள் தனது குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தீபா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.