ADVERTISEMENT

'த்ரிஷ்யம் 2' ரீமேக்கின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

04:32 PM Nov 13, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியது. முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை இரண்டாம் பாகமும் பெற்றது.

இப்படத்தின் வெற்றியை பார்த்த மற்ற மொழி தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் மொழியில் த்ரிஷ்யம் 2 படத்தை ரீமேக் செய்வதற்கான முயற்சியில் இயங்கியுள்ளது. அந்த வகையில் தெலுங்கில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். மீனா, நதியா, எஸ்தர் அனில் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கு த்ரிஷியம் 2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி படம் வரும் 25 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளதாக நடிகர் வெங்கடேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT