ADVERTISEMENT

"உனக்கு பாராட்டு இல்லை" - சூர்யாவுக்கு கடிதம் எழுதிய இயக்குனர்!

02:02 PM Nov 19, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்ணனி நட்சத்திரமான நடிகர் சூர்யாவை, தனது நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர், இயக்குனர் வசந்த்.

ADVERTISEMENT

தற்போது, சூரரை போற்று படம் வெளியாகி, சூர்யாவின் நடிப்பிற்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், இயக்குனர் வசந்த் சூர்யாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இதுவரை சூர்யா நடித்ததில், உச்சபட்சமான நடிப்பு இதுவென்றும், சூர்யாவின் இந்த வெற்றியை, பெருமிதத்தோடு உச்சி முகர்ந்து மகிழ்வதாகவும், அவர் பாராட்டியுள்ளார்.

சூர்யாவிற்கு, இயக்குனர் வசந்த் எழுதிய கடிதம் வருமாறு:-


"அன்புள்ள சூர்யாவுக்கு, இந்த பாராட்டு கடிதம் உனக்கு இல்லை... நெடுமாறன் இராஜாங்கத்திற்கு, முதல் ப்ரேமில் இருந்து ரோலிங் டைட்டில் ஒடுகிற கடைசி ப்ரேம் வரை உன் ஆட்சிதான்.. பிரேம்க்கு ப்ரேம், சீனுக்கு சீன் உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறாய். தமிழ்த்திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த, உன் அறிமுகத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று, கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும், இது இதுதான் உன் உச்சம்! இப்போதைக்கு!!! நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை. இரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய். முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை. இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்த தீவிரத்தன்மை, அந்த சாதிக்க வேண்டும் என்ற வெறி, உன் கண்களில் இறுதிவரை தெரிக்கிறது கனல் மணக்கும் பூக்களாக... ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்கும் போது, ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது, உன் நடிப்பு. எவ்வளவு இயல்பாக, அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்திற்க்கு மிகச்சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய். உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன். ஹேட்ஸ் ஆப் டூ மை டியர் சூர்யா... என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்து விட முடியும் ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ, எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது என உச்சி முகந்து உச்சி முகந்து மகிழ்கிறேன்" இவ்வாறு அந்த கடிதத்தில், இயக்குனர் வசந்த், சூர்யாவை பாராட்டியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT