ADVERTISEMENT

"இது ரஜினியுடைய கதையில்லை" - இயக்குநர் வெங்கடேஷ் விளக்கம்  

06:23 PM Feb 26, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் சத்யா ரஜினி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷெரின் நடிக்கிறார். வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, மூக்குத்தி முருகன், உள்ளிட்ட பலர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்க, வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனத்துடன் இணைந்து கோவை பாலசுப்பிரமணியம் தயாரிக்கிறார். ஆக்ஷன் செண்டிமெண்ட் கலந்த திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெங்கடேசன், நாயகன் விஜய் சத்யா, நாயகி ஷெரின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்.

இதில் பேசிய இயக்குநர் வெங்கடேசன்,"இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. த்ரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்கி உள்ளேன். ரஜினி என்று பெயர் வைத்தவுடன் நிறைய பேர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையா என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இது அவருடைய கதை இல்லை. நாயகன் தீவிர ரஜினி ரசிகராக வருகிறார். அதனால் தான் படத்திற்கு 'ரஜினி' என்று தலைப்பை வைத்துள்ளோம். 'ரஜினி' ரசிகரான விஜய் சத்யா தனது வாழ்வில் எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். அதனால் என்ன மாதிரியான சிக்கல்கள் வருகிறது, அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான செண்டிமென்ட் கலந்து படமாக உருவாக்கியுள்ளோம். விஜய் சத்யாவிற்கு இந்த படத்திற்கு பிறகு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அப்படி சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் "துரு துரு கண்கள்..." பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அந்த பாடல் நிச்சயமாக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆக மொத்தம் 'ரஜினி' இந்த வருடத்தின் மிக சிறந்த பொழுது போக்கு படமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT