ADVERTISEMENT

ரீல் பார்த்திபன் குறித்து ரியல் பார்த்திபன் பதிவு

05:25 PM Oct 20, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள லியோ படம் நேற்று (19.10.2023) உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகியுள்ளது.

முதல் நாளான நேற்று வழக்கம் போல் திரையரங்கம் முன்பு கூடிய ரசிகர்கள் கேக் வெட்டி, பேனர் வைத்து, மேளதாளத்துடன் நடனமாடி, தேங்காய் உடைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். புதுக்கோட்டையில் ஒரு தம்பதி திரையரங்கினுள் நிச்சயம் செய்துகொண்ட சம்பவம், திருப்பூரில் 20 அடி நீள கேக், காஞ்சிபுரத்தில் பிரியாணி விருந்து என ஏகப்பட்ட சுவாரசிய சம்பவங்களும் நடந்தன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ. 145 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தெலுங்கு பதிப்பு மட்டும் முதல் நாளில் ரூ.16 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், படத்தில் பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். இதனால் அந்த பெயர் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இதனை மேற்கோள்காட்டி இயக்குநர் பார்த்திபனை டேக் செய்து எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு கமெண்ட் செய்த பார்த்திபன், "விஜய் - லோகேஷ் கூட்டணியில் பெயரளவிலாவது இடம் பெறுவது நன்று" எனப் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT