
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். அண்மையில் இப்படத்தின் பாடல் காட்சி பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் படக்குழு வெளியிடவுள்ளது. இப்பாடலின் ப்ரோமோ வீடியோ நேற்று வெளியாகி வைரலானது. இப்பாடலை விஜய் பாடியுள்ளார்.
இந்நிலையில் (22.06.2023) பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. முதல் பாடல் மட்டும் இல்லாமல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகவுள்ளதால் டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.