ADVERTISEMENT

“குடும்ப படங்களுக்கான வெற்றிடத்தை நாங்கள் பிடித்துக் கொண்டோம்” - இயக்குநர் மோகன்ராஜா பேச்சு

03:35 PM May 16, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

'பிச்சைக்காரன் 2' படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் மோகன் ராஜா கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார்.

இந்நிகழ்வில் இயக்குநர் மோகன்ராஜா பேசியதாவது “ரொம்ப சந்தோசமா இருக்கு. என்னுடைய குடும்ப விழா இது. நான் இல்லாத விஜய் ஆண்டனியின் மேடைகள் குறைவு. என்னுடைய நல்ல நண்பன் அவர். விஜய் ஆண்டனி குறித்து மற்றவர்கள் பேசியது அவர் வாழும் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. சுயம்புவாக வரும் நபர்களின் மீது எப்போதுமே எனக்கு மரியாதை உண்டு. அப்படி ஒரு சுயம்பு தான் விஜய் ஆண்டனி. என்னுடைய நண்பரான அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனும் கூட. விஜய் ஆண்டனிக்கு விபத்து நடந்து பாதி குணமான நிலையில் அவரை நான் சந்தித்தேன். எனக்குத் தெரிந்து அப்படி ஒரு விபத்திலிருந்து இவ்வளவு விரைவாக, முழுமையாக குணமானவர் உலகிலேயே இல்லை.

அவருடைய தன்னம்பிக்கை அவருக்கு வெற்றியை மட்டுமே கொடுக்கும். இயக்குநர் பாக்யராஜ் சார் இங்கு வந்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டு காலகட்டத்திற்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற இடமான குடும்பப் படங்களை நாங்கள் பிடித்துக்கொண்டோம். பிச்சைக்காரன் படத்தைப் பார்த்தபோது நாங்கள் செய்த அனைத்தையும் தாண்டிய படம் அது என்று தோன்றியது. சசி சாருக்கு என்னுடைய வாழ்த்தும் பாராட்டும். அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான படம் அது. படம் பார்த்துவிட்டு நேராக காரை எடுத்துக்கொண்டு விஜய் ஆண்டனியின் வீட்டுக்குச் சென்று என்னுடைய உணர்வுகளைக் கொட்டிவிட்டேன். அதன் இரண்டாம் பாகமான பிச்சைக்காரன்2 இன்னும் இரண்டு மடங்கு வெற்றியை அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எமனை ஜெயித்து வந்தவர் விஜய் ஆண்டனி. அவருக்காகப் பல வெற்றிகள் காத்திருக்கின்றன. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT