/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ponram.jpg)
'மோ' என்ற திகில் கலந்த நகைச்சுவை படம் மூலம் அறிமுகமான இயக்குநர் புவன் நல்லான் அடுத்ததாக திகில் கலந்த நகைச்சுவை கலந்த 'ஜாம்பி' திரைப்படத்தை இயக்குகிறார். உலகப்புகழ் பெற்ற 'ஜாம்பி' கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்குகிறார். 'ஜாம்பி' என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை 'எஸ்3' பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் V.முத்துக்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
யோகிபாபுவும், யாஷிகா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கோபி சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், 'லொள்ளு சபா' மனோகர், சித்ரா ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவையில் பிரபலமானவர்கள்.
இசை - பிரேம்ஜி, ஒளிப்பதிவு - விக்ரம் மோகன், கலை - கண்ணன், படத்தொகுப்பு - தினேஷ், சண்டை பயிற்சி - ஓம் பிரகாஷ், இணை தயாரிப்பு - பாலா அன்பு.
இப்படத்திற்கான படப்பிடிப்பு பட பூஜையுடன் இன்று ஆரம்பமானது. பிரபல இயக்குநர் பொன்ராம் 'க்ளாப்' அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார். மனோபாலா நடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)