ADVERTISEMENT

இயக்குநர் மணிரத்னத்திற்கு 'பாரத் அஷ்மிதா' விருது 

09:37 AM Feb 03, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் 'பகல் நிலவு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மணிரத்னம், அடுத்ததாக நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். இதனை தொடர்ந்து தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்களை இயக்கி இந்தியாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் தனது தனித்துவமான படத்தின் மூலம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அமைந்துள்ள எம்.ஐ.டி உலக அமைதி கல்வி நிறுவனம் இயக்குநர் மணிரத்னத்திற்கு 'பாரத் அஷ்மிதா' விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த கல்வி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து அதில் ஐந்து பேருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. அதன்படி திரையில் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக இயக்குநர் மணிரத்னத்துக்கு இவ்விருது இன்று (3.2.2022) இணையவழி மூலம் வழங்கப்படவுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT