/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/30_15.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி எடுக்கப்படும் இப்படமானது, இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமாகும். மிகப்பெரிய பட்ஜெட்டில் நட்சத்திரப்பட்டாளங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தை கரோனா நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் மணிரத்னம் மிகுந்த கவனத்துடன் உருவாக்கிவருகிறார்.
இந்த நிலையில், மணிரத்னம் இயக்கிய பழைய படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பணிகள் தற்போது சென்னையிலுள்ள பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான 26 திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு வருவதாகவும் அப்பணிகள் நிறைவடைந்த பிறகு ஒவ்வொரு படமாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)